உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் பாலியல் புகார்: நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்

Published by
Venu
பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முடிவடைந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார்  தீபக் மிஸ்ரா.மத்திய அரசு அவரின் பரிந்துரையை  ஏற்றது.இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ரஞ்சன் கோகோய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  பதவியேற்றார்.இவர் உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி ஆவார்.அதேபோல்  வட கிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார்.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.  மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின்  நீதிபதிகளுக்கு அவர் கடிதம் ஒன்றை  எழுதியுள்ளார்.

நீதித்துறை வட்டாரத்தில் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Image result for ரஞ்சன் கோகோய்

இந்நிலையில் இது தொடர்பாக  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,உச்சநீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர். பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார் அப்போதே இந்த புகார் வந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதுஅவசியமில்லை எனகருதினேன்.எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன்.நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு உடனடியாக , பதிலளிக்க 10 மணி நேரம் கொடுத்தார்கள் .நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது .20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன்.சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன்.

அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்.என் மீது பாலியல் புகார் கூறிய பெண், குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளது. இதன் காரணமாக போலீசார் அவரை இரு முறை எச்சரித்துள்ளார்.

எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள். நான் விசாரிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago