உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் பாலியல் புகார்: நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நீதித்துறை வட்டாரத்தில் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,உச்சநீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர். பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார் அப்போதே இந்த புகார் வந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதுஅவசியமில்லை எனகருதினேன்.எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன்.நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு உடனடியாக , பதிலளிக்க 10 மணி நேரம் கொடுத்தார்கள் .நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது .20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன்.சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன்.
அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்.என் மீது பாலியல் புகார் கூறிய பெண், குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளது. இதன் காரணமாக போலீசார் அவரை இரு முறை எச்சரித்துள்ளார்.
எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள். நான் விசாரிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.