ஒரே நேரத்தில் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்…!

Default Image

ஒரே நேரத்தில் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்.

அசாம் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னும் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவர் இரண்டு வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர் இரண்டு வகை வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. எனவே இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலிருந்தபடியே குணமடைந்துள்ளார். இதுகுறித்து, ஆர்.எம்.ஆர்.சி.யின் மூத்த விஞ்ஞானி டாக்டர் பி.ஜே.போர்ககோட்டி கூறுகையில், இரண்டு வகை வைரஸ் ஒரே நேரத்தில் அல்லது மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு நபரை பாதிக்கும்போது இரட்டை தொற்று ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஏற்படுகிறது.

ஆனால் நோய்த்தொற்றின் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாவதற்கு முன்பு மற்றொரு தொற்று பாதித்த நபரிடமிருந்து வேறுவகை கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்றும், இதனால் தான் இருவகை கொரோனா  வைரஸும் அந்த பெண் மருத்துவரின் உடலில் இருந்து  இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அசாமில் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் இரண்டாவது அறையின் ஆரம்பத்தில் பெரும்பாலான நோயாளிகள் ஆல்ஃபா உருமாற்றம் அடைந்த குரோனா வைரஸ் காரணமாக தான் பாதிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் வகைகள் தொட்டால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்