பெங்களூரில் குழந்தையை திருடி 16 லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் மனநல மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் ரஷ்மி சசிகுமார் என்பவர் பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாக அனுபமா எனும் பெண்மணிக்கும் 16 லட்சத்திற்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அனுபமா என்பவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. ஆனால் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருப்பதால் மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.
எனவே அனுபமாவிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என டாக்டர் ரஷ்மி பரிந்துரைத்தாகவும், இதற்காக 16 லட்சம் அந்த பெண்மணியிடம் மருத்துவர் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரால் வாடகைத்தாய் ஏற்பாடு செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே டாக்டர் ரஷ்மி தெற்கு பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆலோசனை மருத்துவர் போல நடந்து கொண்டு ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்த அன்றே திருடிக் கொண்டு வெளியில் வந்துள்ளார்.
பின் அந்த குழந்தையை அனுபமாவிடம் ஒப்படைத்துவிட்டு பிரசவத்தின் போது இந்த குழந்தை தாயை இழந்து விட்டது என கூறியுள்ளார். இந்நிலையில், இது குறித்து இந்த மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் மருத்துவரை ஒரு வருடமாக தேடி வந்த நிலையில், தற்பொழுது பெலகாவியில் வைத்து பெண் மனநல மருத்துவர் ரஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது தன்னுடைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக தான் இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…