கொரோனா மையத்தில் கணவர் எனக் கூறி காதலனை தன்னுடன் தங்க வைத்த பெண் கான்ஸ்டபிள்.!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவலருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கொரோனா சிகிக்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில், சில போலீசார் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அந்த காவல் நிலையத்தை சார்ந்த பெண் கான்ஸ்டபிள் தன் கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதனால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து, அவர் கொடுத்த தகவல் பெயரில் தபால் துறையில் வேலை செய்து வந்த ஒருவரை அழைத்து அந்த பெண் கான்ஸ்டபிள் உடன் தனிமைப்படுத்தினர்.
பஜாஜ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில், தன் கணவருக்கு கொரோனா என கூறி மருத்துவ ஊழியர்கள் அழைத்து சென்று பெண் கான்ஸ்டபிள் உடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறினார்.
பின்னர் நடத்திய விசாரணையில் அந்த பெண் கான்ஸ்டபிளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதனால், இவரும் வெவ்வேறு கொரோனா முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு ஒன்றில் நிகழ்ச்சி பெண் கான்ஸ்டபிளுக்கும், அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர். பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.