தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு…! மொட்டை அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் நிர்வாகி…!
திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனில் மொட்டையடித்துக் கொண்ட மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ்.
கேரள சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அரசியல் களம் பாப்பரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், கேரள மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தனது பதவியை ராஞ்ஜ்ஜினாமா செய்து மொட்டையடித்துக் கொண்டார்.
மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ், திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனுக்கு வந்தார். அங்கு வந்த அவர், தனது தலையை மொட்டையடித்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தான் எந்த கட்சிக்கு செல்லமாட்டேன் என்றும், மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு காங்கிரஸ்வாய்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.