நடிகை போல வாக்குசாவடிக்கு வந்த பெண் அதிகாரி! ஒரே நாளில் நாடு முழுவது பரவிய புகைப்படம்
மஞ்சள் நிற புடவையில் நடிகை போல தேர்தல் பணிக்கு வந்த பெண் தேர்தல் அதிகாரி. உத்திரபிரதேசம் மாநிலம் தியோரிய பகுதியை சார்ந்த ரீனா திவிவேதி (32) இவர் பொதுபணிதுறையில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணி செய்து வரும் இவருக்கு லக்னோவில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக லக்னோவில் தங்கி அங்கு உள்ள வாக்குசாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் தான் பணி புரியும் வாக்குச்சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரத்தை எடுத்து கொண்டு சென்றார். அப்போது அவர் அணிந்து இருந்த உடை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர்.
வாக்குசாவடிக்கு ரீனா திவிவேதி மஞ்சள் நிற உடையில் பார்ப்பதற்கு சினிமா நடிகை போல வாக்கு பதிவு இயந்திரத்தை எடுத்து கொண்டு வந்து உள்ளார்.ரீனா திவிவேதி பார்த்த சிலர் அவரை புகைப்படம் எடுத்து அப்புகைப்படத்தை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
ரீனா திவிவேதி புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அவரது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர்.இதனால் ஒரே நாளில் நாடு முழுவதும் சமூக வலைத் தளங்களில் “உமன் ஆன் யெல்லோ சாரி”என்ற ஹேஷ் டேக்குடன் இவரது புகைப்படம் பரவியது.
இது குறித்து ரீனா திவிவேதி கூறுகையில் , “எனக்கு 32 வயது ஆகிறது.என் மகன் 9 -ம் வகுப்பு படிக்கிறான் .இத்தனை வயதுக்கு பிறகு எனது புகைப்படத்தை பலரால் பகிரப்பட்டதும் , மற்றவர்களின் கவனம் என் மீது திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்த சில நாள்களில் நான் சினிமா நட்சத்திரம் போல மாறியதாக உணருகிறேன்”என கூறினார்.