நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?
கடந்த ஆண்டு 1,500 ரூபாயாக இருந்த பொதுப் பிரிவினருக்கான கட்டணம் நடப்பாண்டில் 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. அந்த வகையில், தற்போது நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு 1,500 ரூபாயாக இருந்த பொதுப் பிரிவினருக்கான கட்டணம் நடப்பாண்டில் 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு 800 ரூபாயாக இருந்த தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம் நடப்பாண்டில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.