கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி-மத்திய சுகாதார அமைச்சகம்..!
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா நோய்க்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்தோ அல்லது கோவின் இணையதளத்தில் பதிவு செய்தோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைத்து நெறிமுறைகளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு எந்தவித பக்கவிளைவும் சோர்வும் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். தற்போது கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.