இன்று முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.
தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.இதில் இன்று முதல் (அக்டோபர் 15-ஆம் தேதி ) திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்கள் 50% இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும். மாஸ்க் அணிந்த படியே அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் .திரையரங்கு உள்ளே நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது .ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…