மருத்துவ பணியாளர்கள் , சுகாதார ஊழியர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை மத்திய அரசு.!
இந்தியாவில் கொரோனா வைரஸால் 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 157 பேர் குணமடைந்தனர். அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ பணியாளர்கள் , சுகாதார ஊழியர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை இணைச் செயலாளர் புன்யா சலிலா தகவல் தெரிவித்தார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று மருத்துவ குழுவினர் சென்றனர். அப்போது மக்கள் திடீரென கற்களை கொண்டுஅவர்களை தாக்க ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.