நெருக்கடியில் சிக்கிதவிக்கும் எல்ஐசி : 25% பங்குகளை விற்க ரெடியாகும் மத்திய அரசு…!

Published by
Kaliraj

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் வருவாய் பெருமளவு  பாதிக்கப்பட்டு உள்ளதால் அதனால்  ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்ஐசியில் (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) உள்ள 25 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள்  கூறுகையில், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து மற்றும் பங்குகள் விற்பனை மூலமாக சுமார் 2.1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

ஆனால், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 5,700 கோடி மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. தற்போது எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க வசதியாக  சட்ட திருத்தங்களில் மாற்றம் செய்யவும், இதற்காக நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறினார். நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு எடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால்,…

8 mins ago

இரானி கோப்பை : ‘எல்லாம் என் தம்பிக்காக’.. குடும்பத்திற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றிய சர்ஃபரஸ் கான் !

லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…

30 mins ago

13 மாவட்டங்களில் இன்று கனமழை.. வடகிழக்கு பருவமழை அக்,15ம் தேதி தொடக்கம்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…

36 mins ago

“மதுக்கடைகளை மூடுவது திமுகவுக்கு நல்லது.!” மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் திருமா.!

சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…

59 mins ago

வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…

1 hour ago

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…

1 hour ago