கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிற நிலையில், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த இல்லை பிரச்சனையின் பிரதிபலிப்பாக சீனாவிற்கு எதிராக இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த நடவடிக்கையின்படி இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதுகுறித்து கூறுகையில் இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், கடந்த ஆண்டு இறுதிவரை 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவற்றை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து சீன நிறுவனங்கள் அளித்துள்ள பதில்கள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லாததால், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் டிக் டாக், விசாட், சார் இட், யூசி ப்ரவுசர், ஷாப்பிங் செயலிகள், கிளப் ஃபேக்டரி போன்ற செயலிகளும் அடங்கும்.
ஒரு சில தினங்களுக்கு முன் தினம் சிக்கிம் எல்லையில், சீன வீரர்கள் மீண்டும் அத்துமீறல் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது .
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…