ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்தியஅரசு!
ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய கட்டுப்படுகளை விதித்துள்ளது.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இணையதளம் தான் பொழுதுபோக்கு பூங்காவாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுக்களில் சிக்கி, தங்களது பணத்தை இழப்பதோட,.பண இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலையில், தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
- 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது.
- விளம்பரங்களை ஒளிபரப்பும் போது நிதி சார்ந்த அபாயம் இருக்கிறது என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும்.
- எந்த மொழியில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள் வெளியிடப்படுகிறதொ, அதே மொழியில் எச்சரிக்கைகளும் வெளியிடவேண்டும்.
- ஆன்லைன் விளையாட்டுகள் வருமானத்திற்கான வழி, வேலைவாய்ப்புக்கான மாற்று என விளம்பரம் செய்யக்கூடாது.
- ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களை வெற்றியாளர் போல சித்தரிக்க கூடாது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், விளம்பரதாரர்கள் மற்றும் தொலைக்காட்சி காட்சிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.