நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி.
நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாயங்களில் உள்ள காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், கால அவகாசம் வழங்கியும், இந்த பணியிடங்களை மத்திய அரசு இதுவரை நிரப்பவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார். தீர்ப்பாயங்களை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என்றால், அனைத்து சட்டங்களையும் ரத்து செய்துடுமாறும் கடுமையாக கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் என்றும் மத்திய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கிறது எனவும் தெரிவித்த தலைமை நீதிபதி, உடனடியாக எங்களது தீர்ப்பை செயல்படுத்தும் பணிகளை பாருங்கள் என்று கூறி இந்த வழக்கிற்கு ஒத்திவைத்தார்.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…