22 மொழிகளில் EIA வரைவறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.
இந்த புதிய சூழலியல் வரைவின்மீது மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை ஆங்கிலம் உள்பட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.அப்போது தான் கருத்துக்களை பொதுமக்கள் சரியாக கூறமுடியும் என்று கூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் 22 மொழிகளில் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 “வரைவறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மத்திய அரசு.டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.