கொரோனா தடுப்பூசிகளை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வருட காலங்களாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸின் வீரியத்தையும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்து வந்தது. அதில் ஒன்றாக சீரம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா கண்டறிந்துள்ள கோவிஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசிக்கு தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் முதலே இந்தியாவில் முன் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிற நாடுகளுக்கும் இந்தியா நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்கி வரும் நிலையி,ல் இந்த மாதம் 2.40 கோடி கொரோனா தடுப்பூசிகளை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2.40 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதில் 13 நாடுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025