மத்திய நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு.! இன்று மெகா புதிய திட்டம் அறிவிப்பா..?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லி செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித்துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
#BREAKING: 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை அளிக்க முடிவு.!
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக திட்டத்தை நிதியமைச்சர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், தேவை மற்றும் மூலதன செலவினங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்.
ராய்ட்டர்ஸில் வெளியான தகவல்படி , கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முக்கிய துறைகளுக்கு உதவ சுமார் 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள மற்றொரு மெகா புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும், இது குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் இன்று இந்த திட்டத்தை உறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், உற்பத்தியை அதிகரிக்கவும் , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.