மது குடிப்பதற்காக 2 வயது குழந்தையை விற்ற தந்தை..!

ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்துள்ளார்.
ரமேஷின் தந்தை ரவீந்திர பாரிக், இளைய பேத்தியை காணவில்லை என்பதால் ரமேஷிடம் விசாரித்துள்ளார். ரமேஷ் கூற மறுக்க, அதில் சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 2 வயது சிறு குழந்தையை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலாததால், மீண்டும் ரமேஷிடம் குழந்தை காணாமல் போனதுக்கு அவரை குற்றம் சாட்டியிருக்கிறார்.
பின்னர், பணத்திற்காக குழந்தையை கொடுத்ததாக ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அதனை அடுத்து, பாரிக் பிஞ்சராப்பூர் போலீசில் ரமேஷ் மீது மனித கடத்தல் காரணமாக புகார் அளித்துள்ளார். பின்னர், காவல் துறையினர் ரூ.5,000 கொடுத்து வாங்கிய மிது ஜெனாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025