மத்திய பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி பணத்திற்காக தனது 59 வயது தந்தையை கொலை செய்ததாக அங்கித் (32), அவரது நண்பர் நிதின் லோதி மற்றும் பீகாரைச் சேர்ந்த கொலையாளி அஜித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்ததாக இன்று போலீசார் தெரிவித்தனர்.
மகேஷ் குப்தா(59), ஜூலை 21-22 இடைப்பட்ட இரவில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள பிச்சோர் நகரில் உள்ள தனது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ராஜேஷ் சிங் சண்டேல் தெரிவித்தார்.
குப்தாவின் மனைவி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அவர் தனது மகனுடன் வசித்து வந்ததாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர். ராணுவத்தில் இருந்த அவரது மற்றொரு மகன் அனில் குப்தா தற்கொலை செய்து கொண்டதால், குப்தா சமீபத்தில் ₹ 1 கோடி இழப்பீடு பெற்றார் என்றும் அவர் ஓய்வூதியம் பெறுவதையும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
வழக்கின் விசாரணையில், அங்கித் மது போதை மற்றும் சூதாட்டம் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவரது தந்தை பணம் தர மறுத்துள்ளார். அதனால் கோபமடைந்த அவர் தனது தந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.
பீகாரைச் சேர்ந்த ‘அஜித் கிங்’ என்ற மற்றும் அவரது கும்பலை தனது தந்தையைக் கொள்வதற்காக ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, ரூ. 1 லட்சம் தருவதாக உறுதியளித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். பின் அந்த கும்பலை வைத்து குப்தாவை கொன்றுவிட்டு அடையாளம் தெரியாத சிலர் தனது தந்தையைக் கொன்றதாக அங்கித் அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினரிடம் காலையில் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…