1 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை.! தீவிர சிகிச்சையில் குழந்தை.!

கேரளாவின் எர்ணாகுளத்தில் அங்கமாலியில் வசித்து வருபவர் ஷைஜு தாமஸ்.இவர் நேபாளத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிறப்பில் சந்தேகமடைந்த தாமஸ், மனைவியிடம் இருந்து குழந்தையை பிடுங்கி தரையில் அடித்துள்ளார்.
அந்த குழந்தை பிறந்து 54 நாள் மட்டுமே ஆகியுள்ளது. படுகாயம் அடைந்த குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் தாமஸ் தன் மகள் தெரியாமல் கட்டிலிலிருந்து விழுந்ததாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் தாமஸை கைது செய்து கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025