ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள் என மருமகனுக்கு சீர் கொடுத்து அசத்திய மாமனார்..!
ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள் என மருமகனுக்கு மாமனார் சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.
தமிழக மக்கள் ஆடி மாதத்தில் மணமகன் வீட்டிற்கு ஆடி சீர் கொடுப்பது வழக்கம். அதேபோல், தெலுங்கு மக்கள் தெலுங்கு மாதமாக இருக்கக்கூடிய ஆஷாதம் மாதத்தில் பொனாலு என்ற விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் திருமணமான மகளுக்கு சீர் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
இதேபோன்று ஒருவர் தனது மருமகனுக்கு சீர் கொடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள ஏனாம் மாவட்டத்தை சேர்ந்த பவன்குமார் என்பருக்கு அவருடைய மாமனார் வெகு விமர்சையாக சீர் அனுப்பியுள்ளார். இவருடைய மாமனார் ராஜமுந்திரியை சேர்ந்த பலராம கிருஷ்ணா.
தங்களது மகள் பிரத்யுஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளும் காரணத்தால் பலராம கிருஷ்ணா மணமகன் வீட்டுக்கு 1000 கிலோ மீன்கள், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 250 கிலோ மளிகைப்பொருட்கள், 250 வகையான ஊறுகாய், ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என சீர் அனுப்பியுள்ளார்.
இவை அனைத்தும் வண்டி வண்டியாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. வெகு விமர்சையாக சீர் வருவதை கண்டு உள்ளூர் வாசிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர்.