72 வயதுடைய முதியவருக்கு12 வயதான மகளை திருமணம் செய்ய வற்புறுத்திய தந்தை.!
பாகிஸ்தான் : கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 வயது சிறுமியை 72 வயது முதியவர் திருமணம் செய்வதை சார்சத்தா மாவட்ட போலீசார் வெற்றிகரமாக தடுத்து மணமகனை கைது செய்தனர்.
விசாரணையின் பின்னணியில் சிறுமியின் தந்தையான ஆலம் சையத் தனது 12வயது மகளை முதியவருக்கு 5,00,000 ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. பின்னர், திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு, இறுதியில் திருமண நடைபெற இருக்கும் சற்று முன், தகவலறிந்து வந்த போலீசார், மணமகன் ஹபீப் கான் என அடையாளம் காணப்பட்டதோடு, திருமணத்தை நடத்தும் நபரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தை, 72 வயதான மணமகன் மற்றும் ஒரு அதிகாரி மீதும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிறுமியின் தந்தை தப்பியோடியுள்ளார்.
குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், சட்ட அமலாக்க முகவர் ராஜன்பூர் மற்றும் தட்டாவில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நிறுத்தியுள்ளனர்.