மத்தியப் பிரதேசத்தின் ஷாஹோலில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் இறந்த தனது 13 வயது மகளின் உடலை பைக்கில் கொண்டு செல்லும் நிலைக்கு தந்தை ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் மருத்துவமனையில் லக்ஷ்மண் என்பவரின் 13 வயது மகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தனது மகளின் உடலை கொண்டு சொல்லு அம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு கேட்ட தந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது பற்றி லக்ஷ்மண் கூறுகையில், மருத்துவமனை அதிகாரிகளிடம் வாகனம் ஒன்றைக் கேட்டதாகவும், ஆனால் 15 கிலோமீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது என கூறி மறுத்துவிட்டனர்.
ஆம்புலன்சுக்கு பணம் இல்லாததால் லக்ஷ்மண் சிங் தனது மகளின் உடலை பைக்கில் ஏற்றி 70 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்.அப்பொழுது அந்த வழியாக வந்த ஷாஹ்டோல் ஆட்சியர் வந்தனா வைத்யா இவரது நிலையை கண்டு உடலை கொண்டு செல்ல வாகன ஏற்பாடு செய்ததோடு பண உதவியும் அளித்துள்ளார் .மேலும் இது குறித்த விசாரணைக்கும் வந்தனா உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…