ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் இறந்த மகளின் உடலுடன் 70 கிமீ பைக்கில் பயணித்த தந்தை

Father with Daughter body

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹோலில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில்  ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் இறந்த தனது 13 வயது மகளின் உடலை பைக்கில் கொண்டு செல்லும் நிலைக்கு தந்தை ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் மருத்துவமனையில் லக்ஷ்மண் என்பவரின் 13 வயது மகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

தனது மகளின் உடலை கொண்டு சொல்லு அம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு  கேட்ட தந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது பற்றி லக்ஷ்மண் கூறுகையில், மருத்துவமனை அதிகாரிகளிடம் வாகனம் ஒன்றைக் கேட்டதாகவும், ஆனால் 15 கிலோமீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது என கூறி  மறுத்துவிட்டனர்.

ஆம்புலன்சுக்கு பணம் இல்லாததால் லக்ஷ்மண் சிங் தனது மகளின் உடலை பைக்கில் ஏற்றி 70 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்.அப்பொழுது அந்த வழியாக வந்த ஷாஹ்டோல் ஆட்சியர்  வந்தனா வைத்யா இவரது நிலையை கண்டு  உடலை கொண்டு செல்ல வாகன ஏற்பாடு செய்ததோடு பண உதவியும் அளித்துள்ளார் .மேலும்  இது குறித்த விசாரணைக்கும் வந்தனா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்