உ.பி-யில் 17வயது மகளின் தலையை வெட்டி எடுத்து கொன்ற தந்தை .!
உ.பி-யில் தனது சொந்த மகளின் தலையை வெட்டி எடுத்து தந்தையே கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது சொந்த மகளின் தலையையே வெட்டி எடுத்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சர்வீஷ் குமார் என்பவரின் 17 வயது மகள் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனை அறிந்த சர்வீஷ் குமார் தனது சொந்த மகளின் கழுத்தை அறுத்து விட்டு அவரின் தலையை தனியாக வெட்டி எடுத்துள்ளார் .அதன் பின் வெட்டி எடுத்த தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.ஆனால் அவர் செல்லும் வழியிலையே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில்,தனது குற்றத்தை ஒத்து கொண்டதுடன் தனது மகளின் தலையில்லா சடலம் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சொந்த மகளின் தலையையே வெட்டி எடுத்து தந்தை செய்த இந்த கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திர பிரதேசத்தில் தான் அதிகளவில் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், கடந்த 2019-ல் மட்டுமே உபி-யில் 7,444 போக்ஸோ குற்றங்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.தேசிய அளவில் அதிக குற்றங்கள் நிகழ்ந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்து வருவதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.