பிறந்து 15 நாட்களே ஆன மகனை 1.45 லட்சத்திற்கு விற்ற தந்தை கைது!

Default Image

பிறந்து 15 நாட்களே ஆன தனது மகனை 1.45 லட்சத்திற்கு விற்ற தந்தை உத்திரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான பல வழிகள் இருந்தாலும், தங்களுக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவில் வாசல்களில் இருக்ககூடிய பெற்றோர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் குழந்தைகளை பெற்று குப்பைத் தொட்டியில் போடுவதும், விற்பதும், கொல்வதுமான கொடூரமான செயல்களை செய்யும் பெற்றோர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

பணத்திற்காக தங்களது குழந்தைகளை விற்கக்கூடிய பெற்றோர்களின் எண்ணிக்கை தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது என்றே கூறலாம். அவ்வாறு உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியாவில் உள்ள நபர் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகும் நிலையில், இந்த குழந்தையை 1.45 லட்சத்திற்கு விற்று உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மட்டுமல்ல, வேறு ஒரு நபருடன் இணைந்து விட்டதாக அவர் மனைவி புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - Trump - Zelensky Meeting
DMK MK Stalin - BJP State President Annamalai
Aadhav Arjuna - Thirumavalavan - TVK Leader Vijay
shreya ghoshal
tvk admk
England vs South Africa
tn rainy