கர்நாடகாவை சேர்ந்த 24 வயது பெண்ணின் 4 விரலைகள் வெட்டிய தந்தை மற்றும் மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
கர்நாடகாவை சேர்ந்த தனலட்சுமி என்ற 24 வயது பெண் சத்யா என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் பி.ஜி.பல்யா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனலட்சுமியின் பெற்றோர் திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
ஆட்சேபனை இருந்தபோதிலும், தனலட்சுமியும் சத்யாவும் திங்களன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே தகவல் தனலட்சுமியின் குடும்பத்தினரை கோபடையச் செய்துள்ளது.
சனிக்கிழமை, சிறுமியின் தந்தையும் சகோதரரும் தனலட்சுமியை ஒரு மருந்து கடைக்கு அருகே பார்த்தார்கள், இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் அதிகரித்தபோது, இரண்டு பேரும் தனலட்சுமியைப் பிடித்து அவளது நான்கு விரல்களை வெட்டியுள்ளனர்.
இதனைக் கண்ட ஊர் மக்கள் தனலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த கொடூர குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…