வாழ்க்கையில் உங்கள் கனவு என்னவாக இருந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், விதிதான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக சேம்பர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் இந்த நிலைக்கு வருவதற்கான உந்துதல் யாரிடமிருந்து கிடைத்தது எனவும், உங்களது சிறுவயது கனவு என்னவாக இருந்தது எனவும், உங்களது ரோல் மாடல் யார் எனவும் பல்வேறு கேள்விகள் தொடர்ச்சியாக கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மிக நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள். எனக்கு கனவு என்று ஒன்று சிறுவயது முதல் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் எனக்கு முன்னால் இருந்த வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விட்டேன், எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை. விதிதான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தற்பொழுது எனக்கு இந்த பணியை கொடுத்தவர்களையோ அல்லது இந்திய மக்களையோ வருத்தம் அடையச் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…