டிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்!
மத்திய அரசானது அணைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் படி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை எடுத்து வருகிறது.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் டோல்கேட்டிற்கு புதிய டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஃபாஸ்ட்டேக் எனப்படும் முறையை கொண்டுவந்துள்ளது.
ஓட்டுனர்கள் இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு மொபைல் சிம் கார்டிற்கு ரீசார்ஜ் செய்வது போல, ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், டோல்கேட் செல்லும் போது காத்திருக்க வேண்டியதில்லை இந்த கார்டை காண்பித்தால் போதும் ஒரு நொடியில் அங்கிருந்து சென்றுவிடலாம். என கூறப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு இணையம் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.