இனி மணிக்கணக்கில் டோல்கேட்டில் காத்திருக்க வேண்டியதில்லை! ஞாயிறு முதல் ஃபாஸ்ட்டேக்!
வழக்கமாக இருசக்கர வாகனங்களை தவிர்த்து, இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சிலநேரம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது புதிய முறையை கொண்டு வந்துள்ளது.
ஃபாஸ்ட் டேக் என அழைக்கப்படும் இந்த முறையில் நம் வங்கி கணக்கானது அந்த ஃபாஸ்ட் டேக் கணக்கில் இணைத்துக்கொள்ளபடும். இதற்காக நெடுஞ்சாலைத்துறை 22 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நமது அடையாள அட்டைகளான, வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாகன புத்தகம் இவற்றை கொண்டு வங்கி கணக்கோடு ஃபாஸ்ட் டேக் கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.
இதனால் ஃபாஸ்ட் டேக் மூலமாக நமக்கு ஓர் அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் கொடுக்கப்படும். அந்த ஸ்டிக்கரை நமது வாகனத்தின் கண்ணாடியில் கொட்டிவிட வேண்டும். பிறகு, நாம் அந்த டோல்கேட்டை கடக்கையில் அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதனால், நாம் டோல்கேட்டில் வெகு நேரம் காக்க வேண்டிய நிர்பந்தம் இனி ஏற்படாது. இந்த நடைமுறை வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தபட உள்ளது. இதற்காக தற்போது தீவிரமாக வங்கிகள் வேலை செய்து வருகின்றன.