நாளை முதல் அமலுக்கு வர இருந்த பாஸ்ட் டேக் (fastag) முறை ! ஒத்திவைத்த மத்திய அரசு
பாஸ்ட் டேக் (fastag) திட்டம் அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞசாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் இருந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) என்ற முறை ஆகும்.இதன் மூலமாக மின்னனு முறையில் சுங்க கட்டணம் செலுத்தலாம்.இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
எனவே இந்த எளிய திட்டத்தை நாடு முழுவதும் டிசம்பர் 1- ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த வசதிக்காக வாகன ஓட்டிகள் வேகவேகமாக பாஸ்ட் டேக் (fastag) முறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஓன்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) திட்டத்தை டிசம்பர் 15 -ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் அதிகப்படியான கால அவகாசம் வழங்கும் நோக்கில் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுளளது.