இதுவரை 70 லட்சம்! அன்று ஒருநாள் மட்டுமே 1,35,583! சாதனை படைத்துவரும் ஃபாஸ்ட்டேக்!
இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் என நான்கு சக்கரங்களுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சில சமயம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட்டில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது ஃபாஸ்ட் டேக் புதிய முறையை கொண்டு வந்துள்ளது.
இந்த முறைப்படி வாகன ஓட்டிகள் தங்கள் வாகன புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை கொண்டு உங்கள் உங்கள் வங்கி கணக்கோடு இணைத்துக்கொண்டால், பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் தருவார்கள் அதனை, வண்டி முகப்பில் ஒட்டிக்கொள்ள வேண்டும். நாம் டோல்கேட்டில் கடந்து செல்லும்போது, அந்த பார்கோடை அங்குள்ள எந்திரம் ஸ்கேன் செய்து நமது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும்.
இந்த வசதிக்காக வாகன ஓட்டிகள் தற்போது வேகவேகமாக விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்கும் காலம் சில மாதங்களுக்கு முன்பே துவங்கி இருந்தாலும், தற்போது டிசம்பர் 1 இதற்கு காலக்கெடு என்பதால், வாகன ஓட்டிகள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் இணைத்து வருகின்றனர்.
இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் விற்பனை ஆகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டுமே 1,35,583 ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.