2017 டிசம்பருக்கு முன்னர் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்.!
டிசம்பர் 2017க்கு முன்னர் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் நடைமுறை என்பது ஆர்.எஃப்.ஐ.டி எனும் ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அடையாளம் ஆகும். அந்த ஃபாஸ்டேக் கணக்கானது, பயனர் சேமிப்பு கணக்கில் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனத்தினை டோல் பிளாசாவில் நிறுத்தாமல் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் ஃபாஸ்டேக் அடையாள எண்ணின் மூலம் டோல் கட்டணம் வசூலித்து கொள்ளப்படும்.
இந்த நடைமுறையானது கடந்தாண்டு அக்டோபரில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தும் பல வாகனங்களில் ஃபாஸ்டேக் கணக்கு தொடங்கப்பெறாமல், டோல் பிளாசாவில் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் படி, டிசம்பர் 2017க்கு முன்னர் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் எனவும், இனி ஆர்டிஓ ஆபிசில் வாகனத்தை புதுப்பித்து காண்பிக்கவரும் அனைவரது வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கணக்கு கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.