தேசிய மாநாட்டின் தலைவராக ஃபரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு!
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக ஃபரூக் அப்துல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் ( National Conference President) தலைவராக ஃபரூக் அப்துல்லா இன்று மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பரூக் அப்துல்லா அறிவித்த நிலையில், மீண்டும் தேர்வாகியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை பரூக் அப்துல்லாவிற்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் தேர்வாகியுள்ளார்.
பரூக் அப்துல்லாவுக்கு ஆதரவாக காஷ்மீரில் இருந்து 183 பரிந்துரைகளும், ஜம்முவில் இருந்து 396 பரிந்துரைகளும், லடாக்கிலிருந்து 25 பரிந்துரைகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஃபரூக் அப்துல்லா.
காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி முக்கியமானது. பல்வேறு முறை காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி மற்றும் முதலமைச்சராக இருந்துள்ளார். பரூக் அப்துல்லா 1983-ம் ஆண்டில் இருந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவராக உள்ளார்.
தற்போது 85 வயதான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரூக் அப்துல்லா சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முன்னதாக, ஜே & கே முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தனது தந்தை கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்று கூறியிருந்தார்.