காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.திடீரென்று அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள்.
இதனையடுத்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இன்று மக்களவையில் காஷ்மீர் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் தலைவர்களான உமர் அப்துல்லா ,மெகபூபா முப்தியை நிலைமை என்ன? என்றும் வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்களா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினரான பரூக் அப்துல்லா எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து பேசினார்.ஃபாரூக் அப்துல்லா தனது வீட்டில்தான் இருக்கிறார்.அவர் கைது செய்யப்படவும் இல்லை வீட்டுக் காவலில் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,எனது முதுகில் குத்தாதீர்கள்,நெஞ்சில் சுடுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
என் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் நான் வீட்டுக் காவலில் இல்லை என்று மக்களவையில் உள்துறை அமைச்சகம் சொல்வது பொய் என்றும் தெரிவித்தார்.எனது மகன் ஒமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார்.நான் நம்பிக்கை வைத்த இந்தியா இது அல்ல. த்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தார்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…