டெல்லி எல்லை பதற்றம்… டெல்லி சென்ற விவசாயிகள் கைது ..!
கடந்த முறை விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், இம்முறை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு சட்டப்படி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கையை ஏற்கவிட்டால் இன்று காலை 10 மணிக்கு பல்வேறு மாநில விவசாயிகள் டிராக்டர் மூலம் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
இதுகுறித்து நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் ஆறு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் அறிவித்தப்படி டெல்லியை நோக்கி விவசாயிகள் போரணியை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், போராட்டத்துக்காக இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சாம்பு எல்லை வழியாக டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்..!
சர்வதேச எல்லை போல் பஞ்சாப் ஹரியானா எல்லையில் துணை ராணுவ படைகளை குவித்துள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி அணியாக விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். ‘டெல்லி சலோ’ போராட்ட அணிவகுப்பைத் தொடங்கியுள்ளதால், சாம்பு, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள இரண்டு பாதைகளில் பலத்த தடுப்புகள் போடப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாகனங்களை பஞ்சர் ஆக்கும்வகையில் சாலையில் ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் தடுப்புகள் மற்றும் முள்கம்பிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உத்தரவாதம் செய்யும் சட்டத்தை இயற்றுவது மற்றும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி பயிர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது தான்.