வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.
இதையடுத்து அண்மையில் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடைபெறுகிறது.இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவில்லை என்றால், பல்வேறு முற்றுகை போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…