தொடர்ந்து போராடும் விவசாயிகள் ! இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில்,இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால் தமது போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளனர்.ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.