விவசாயிகள் கூடாரங்கள் மீது கற்கள் வீச்சு.. கண்ணீர் புகைகுண்டு வீசிய போலீசார்..!
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக விவசாயிகள போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், ஒருதரப்பு விவசாயிகள் அனுமதி கொடுத்த நேரத்திற்கு முன்னதாகவே டிராக்டர் பேரணியை தொடங்கியதால், போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் டிராக்டர்களுடன் செங்கோட்டைக்குள் நுழைந்தனர். இந்த சம்பவத்தின் போது ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி- ஹரியானா இடையே உள்ள சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் உள்ளூர்வாசிகள் என கூறி சிலர் தங்களின் இடம் காலி செய்யப்பட வேண்டும் என்று தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேர் கொண்ட கும்பல் ஒன்று, இன்று மதியம் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் கூடாரங்கள் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். கண்ணீர் புகைக்குண்டை வீசி காவல்துறை இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் சில காவல் துறையினரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
#WATCH: Delhi Police baton charges and uses tear gas shells to control the situation at Singhu border where farmers are protesting against #FarmLaws
A group of people claiming to be locals were also protesting at the site demanding that the area be vacated. pic.twitter.com/mF62LNB87j
— ANI (@ANI) January 29, 2021