சமீபத்தில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக பஞ்சாபில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேசுவதற்கும் , அவர்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கும் மத்திய அமைச்சர் ஜவடேகர் தற்போது கோவாவில் உள்ளார்.
இந்நிலையில், அந்த மூன்று மசோதா சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் பஞ்சாபிற்கு மட்டுமே, அதுவும் அரசியல் காரணங்களால் மட்டுமே என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்தார். இந்த சட்டங்களின் காரணமாக போராட்டங்கள் தொடங்கியதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் பஞ்சாபைத் தவிர, வேறு எங்கும் போராட்டங்கள் இல்லை என்று தெரிகிறது. பஞ்சாபிலும், அரசியல் காரணங்களால் கிளர்ச்சி ஏற்படுகிறது.
மேலும், பஞ்சாபில் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது. அரசியல் சம்பந்தப்பட்டதால் விவசாயிகள் நெல் விற்பனையும் போராட்டமும் தொடங்கியுள்ளனர். ஆட்சியில் இருக்கும் காங்கிரசும், ஷிரோமணி அகாலிதளமும், ஆம் ஆத்மி கட்சியும் பல்வேறு சட்டங்களை எதிர்க்கின்றன காரணம் கிளர்ச்சி, அரசியல் என ஜவடேகர் கூறினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…