விவசாயிகள் போராட்டம் : பின்னணியில் பாகிஸ்தான், சீனா…! மத்திய அமைச்சர் அதிரடி!
தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் விவசாயிகளுடையது அல்ல. இதற்க்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் இருக்கிறது மத்திய இணை அமைச்சர் ராவ்சாஹேப் டான்வே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில், இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசிற்கும், விவசாயிகளுக்கும் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலு, எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல தலைவர்கள் ஆட்டகுறைவு தெரிவித்து வருகிற நிலையில், சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் ராவ்சாஹேப் டான்வே, இதுகுறித்து கூறுகையில், ‘தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் விவசாயிகளுடையது அல்ல. இதற்க்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.