விவசாயிகள் போராட்டம்: விருதை திருப்பி அளிக்கும் கவிஞர்கள்,விளையாட்டு வீரர்கள்.!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பாட்டர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தொடர்ந்து 12வது நாளாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் இல்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லைக்கு சென்று அங்கு முகாமிட்டுள்ள விவசாயிகளுக்காக மாநில அரசு செய்த ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் பிரச்சினை மற்றும் போராட்டம் முற்றிலும் நியாயமானது. நான் இன்று முதல்வராக இங்கு வரவில்லை, ஒரு தன்னார்வலராக வந்துள்ளேன்.
பாரத் பந்த்தை நாங்கள் அதை ஆதரிக்கிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதனிடையே, வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் விளையாட்டு துறையில் உயர்ந்த விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை திரும்ப கொடுப்பதாக குத்துசண்டை வீரர் வீஜேந்தர் சிங் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்திருந்தார். இதுபோன்று பல விளையாட்டு வீரர்கள், கவிஞர்கள் தங்கள் விருதுகளை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மல்யுத்த வீரர் கர்த்தர் சிங் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திரும்ப கொடுக்க டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனை நோக்கி பேரணியாக சென்றனர். இருப்பினும், அவர்களை டெல்லி காவல்துறை பாதி வழியில் நிறுத்தப்பட்டனர். பஞ்சாபில் இருந்து 30 விளையாட்டு வீரர்கள் மற்றும் இன்னும் சிலர் தங்கள் விருதை திருப்பித் தர விரும்புகிறார்கள் என்று கர்த்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பாட்டர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025