மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் குறித்து விவசாய சங்கங்களை மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
ஆனால் ஐந்து முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும், எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இதனை அடுத்து இன்றும் ஆறாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்றும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், வேளாண் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஏற்க முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட போராட்டங்களை திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி வருகின்ற 12ம் தேதி டெல்லி- ஜெய்ப்பூர், டெல்லி – ஆக்ரா ஆகிய சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் விவசாய சங்கங்களால் ஆக்கிரமிக்கப்படும் எனவும் அந்த வழியாக அன்று செய்யக் கூடிய பொது மக்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், டிசம்பர் 14ஆம் தேதி பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…