Farmers Protest: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக பஞ்சாப்-அரியானா எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை தொடங்கினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் 12 மணிக்கு முன்னதாகவே போராட்டக் களங்களுக்கு வந்த விவசாய சங்கத்தினர், தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் போராட்டம் நடத்தும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன, பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதோடு டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி பஞ்சாப்-அரியானா எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சண்டீகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வேளாண் சங்கத் தலைவர்கள், மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது எனவும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…