ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

Rajpura Railway Station

அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய சட்டம் இயன்ற வேண்டும், மின்சார திருத்த மசோதா 2020 ரத்து செய்யவேண்டும், கடந்த முறை நடைபெற்ற விவசாய போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி போரணியாக செல்கின்றனர்.

விவசாயிகள் டெல்லியில் நுழையாமல் இருக்க பஞ்சாப் ஹரியானா மற்றும் உத்திரபிரதேச எல்லையில் போலீசாரும், துணை பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை போலீசார் தடுத்து வருகிறார்கள். இன்று விவசாயிகள் போராட்டத்தின் மூன்றாவது நாளில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புராவில் உள்ள ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அமைச்சர்கள்  அர்ஜுன் முண்டா,  பியூஷ் கோயல் மற்றும்  நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இதற்கு முன் மத்திய அரசும், விவசாய சங்கங்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி 8 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் இன்று 3-வது முறையாக பேச்சுவார்த்தையைக் நடைபெற உள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்