விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியிருந்த நிலையில் தற்போது அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து, பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே, அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க மாநிலத்தின் முதல்வர் மனோகர் லால் கத்தார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். பொது ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இணைய சேவை முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விவசாய போராட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை பிப்ரவரி 29-ம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த நிலையில், அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்பாலாவில் வசிக்கும் மக்கள் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பல நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…