விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை ! பிரதமர் மோடி அவசர ஆலோசனை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.ஆகவே நாடு தழுவிய போராட்டத்திற்கு முடிவு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி கொண்டு வருகிறது.
இதனால் இன்று (டிசம்பர் 5 ஆம் தேதி) விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில்,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் , தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025