விவசாயிகள் போராட்டம்.. விருதை வாங்க மறுத்த விஞ்ஞானி
விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்கிடையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவசாயிகள் தலைவர்கள் இன்று இரவு 7 மணிக்கு சந்தித்தனர்.
இத்தகைய சூழ்நிலையில், நாளை கூட்டத்திற்கு பின், சில நல்ல செய்திகள் வெளிவரும் என்று விவசாயி நம்புகிறார். விவசாயிகளுக்கு பல தலைவர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழக தலைமை விஞ்ஞானி டாக்டர் வருந்தர் பால் சிங்கிற்கு அந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொன்விழாவில் அவரது சேவையை பாராட்டி தங்கப்பதக்கம் மற்றும் விருதை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த விருதினை மத்திய உர அமைச்சர் வழங்க இருந்த நிலையில், டாக்டர் வருந்தர் பால் சிங்கின் பெயர் விருதுக்கு அழைக்கப்பட்டபோது, அவர் மேடையில் ஏறி தங்கப்பதக்கம் மற்றும் விருதை வாங்க மறுத்துவிட்டு பின்னர்,பேசிய வருந்தர் பால் சிங் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இருப்பினும், தன்னை விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. சாலைகளில் விவசாயிகள் போராடும்போது இந்த விருதினை வாங்க எனது மனசாட்சி இடம் தரவில்லை எனக் கூறி மேடையை விட்டுக் கீழே இறங்கி விட்டார்.
Dr Varinder Pal Singh, Principal Soil Chemist PAU Ludhiana, refused on stage to accept Gold Medal and the Golden Jubilee Award for Excellence from the Chemical and Fertiliser minister, GOI while registering his protest in support of the farmers. pic.twitter.com/gMi4ChA4ZX
— Om Thanvi (@omthanvi) December 8, 2020
இவரின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.