தொடரும் விவசாயிகள் ! மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உள்ளிட்டோர் ஆலோசனை
விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வரும் நிலையில் ,இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,இன்று மாலை 3 மணி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் இந்த அழைப்பு விடுக்கப்பட்டாலும் ,முதலில் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவா ? வேண்டாமா ? என்று ஆலோசித்து முடிவு செய்த பின்னரே அவர்களது முடிவு தெரிய வரும் .
இதனிடையே டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்திற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,உள்துறை அமைச்சர் அமித்ஷா ,பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.அங்கு சென்ற அவர்கள் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.